Loading...
டாடா யோதா கண்ணோட்டம்

டாடா யோதா பிக்கப் ஒரு பார்வை டாடா மோட்டர்ஸ் வழங்கும் இந்தியாவின் மிகச் சிறந்த பிக்கப்

நிர்வாகி | Jul 1, 2019 8:04 am
பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாடா யோதா பிக்கப் ஒரு பார்வை. இந்தியாவின் மிகச் சிறந்த பிக்கப்

டாடா யோதா பிக்கப் டிரக் என்பது டாடா மோட்டர் புதிதாக அறிமுகப்பதுத்தியுள்ள உயர் செயல்திறன் கொண்ட பிக்கப் வாகனம் ஆகும். இதன் உறுதியான தோற்றங்கள், அசத்தலான சிறப்பம்சங்கள், குறைவான இயக்க செலவு போன்றவற்றால் இது உலகிலுள்ள பிக்கப்புகளுடன் ஒப்பிடும் வகையில்அதிக உறுதியான வர்த்தக வாகன மாடல் என்று நன்மதிப்புப் பெற்றுள்ளது.

இது 4x4 மற்றும் 4x2 வகைகளில் அதிகபட்சமாக 1500கிலோ (யோதா ப்ளஸ் 1500 வகை) பேலோடு திறனுடன் கிடைக்கிறது. வர்த்தக பயன்பாட்டிற்குடாடா யோதா பிக்கப் மிகச் சிறந்த வாகனம் ஆகும். இது மேம்படுத்தப்பட்ட ஸ்திரத்தன்மை, ஆன்டிரோல் பார்ஸ் மற்றும் 215/75 அளவு கொண்ட பெரிய 16 அங்குல ரேடியல் டயர்களுடன் வருகிறது. எனவே இந்த வாகனம் மிக ஏற்றமுள்ள நில அமைப்புகளில் லோடை எற்றிக் கொண்டு மிகச் சுலபமாக செல்கிறது

யோதா எஸ்சி 4X4 சிறப்பம்சங்கள்

ட்ரைவர் +1 கொண்ட 4 x 4 வகை யோதா டாடா யோதாக்களில் மிக பிரபலமான வகை ஆகும்.

இதற்கு டாடா 4SPCR TCIC 4சிலிண்டர் BSIV சக்தி கொடுக்கிறது. இதன் அவுட்புட் 64 kW(85Hp) @ 3000 r/min ஆகும். இதன் அதிகபட்ச டார்க்85HP @1000 -2000 r/min ஆகும். இதனால் இது முழு லோடு ஏற்றிய நிலையில் வலிமையான பிக்கப் தருகிறது. மேலும் குறைவான கியர் ஷிஃப்டுகளுடன் சிறந்த மைலேஜும் தருகிறது.

இதன் முக்கியமா சிறப்பம்சம் சிங்கிள் கேப் 4 x 4 யோதாவின் 55% கொண்ட உயர் கிரேடபிலிட்டிதான். இது அதிகபட்ச லோடுடன் எந்த நில அமைப்பையும் சமாளித்து ஓடுகிறது. எனவே அதிக சரிவான எற்றம் கொண்ட சாலைகளில் சரக்குகளைப் போக்குவரத்து செய்ய வியாபாரத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. இதன் நீடித்துழைக்கும் பாடிக்கு ரீயின்ஃபோர்ஸ்டு 4 மி.மீ. சேஸி, யூனிடைஸ்டு டபுள் பியரிங் கொண்ட உறுதியான பின் ஆக்ஸில் ஆதரவாக இருக்கிறது. கூடுதலாக செமி எலிப்டிகல் லீஃப் ஸ்ப்ரிங்க்ஸ் சஸ்பென்ஷன் உள்ளது - முன் பக்கத்தில் 6 லீவ்ஸ் மற்றும் பின்பக்கத்தில் 9 லீவ்ஸ். இதனால் லோடு ஏற்றிக் கொண்டு அதிக வேகத்தில் செல்லும்போது பாதுகாப்புக் கிடைக்கிறது.

யோதா பிக்கபின் கிரவுண்டு க்ளியரன்ஸ் 190 மி.மீ. இவ்வகையில் இதுவே மிகவும் அதிகம். எனவே சாலையிலும் சாலை இல்லாத இடங்களிலும் மிகச் சிறப்பாக ஓட்ட முடிகிறது. இதில்தான் இவ்வகையில் மிகப் பெரிய ஃபிளாட் லோடு பாடி இருக்கிறது. அதாவது 2227 மி.மீ. (7.4 அடி) x 1703 மி.மீ. (5.6 அடி).

இந்த பிக்கப் டிரைவருக்கு கூடுதல் சௌகரியம் தரும் வகையில் பவர் ஸ்டியருங்குடன் வருகிறது.

சுலபமாக பராமரிக்க முடியும். குறைவான இயக்க செலவு.

டாடா யோதா பிக்கப் வாடிக்கையாளர்களுக்கு மன நிம்மதியைத் தருகிறது. ஸ்மார்ட்டான பிக்கப்பில் புரொப்பெல்லார் ஷாஃப்ட் இருக்கிறது. இதற்கு க்ரீஸிங் தேவைப்படாது. எனவே மீண்டும் ஏற்படக்கூடிய செலவும் குறைகிறது.

இதற்கு சர்வீஸ் செய்வதற்கான இடைவெளி 20000 கி.மீ. எனவே அதிக சேமிப்பு, வகானம் ஓடும் காலம் அதிகம். இதன் நம்பகமான மற்றும் உறுதியான ட்ரைவ் லைன் இதன் ஆயுளையும், செயல்திறனையும் அதிகரிக்கிறது. மேலும் இது ட்ரைவ்லைனிற்காக3 ஆண்டுகள் அல்லது 30000 கி.மீ என்ற முழுமையான வாரண்டி தருகிறது. இதுவே இத்தொழிலில் மிக சிறப்பானது.

இது சிங்கிள் கேப் மற்றும் டபுள் கேப் வகைகளில் கிடைக்கிறது. இது ரூ.6.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற குறைவான வகையில் கிடைக்கிறது. மேலும் இதன் 4x4 எஸ்சி வகையின் விலை 7 லட்சம். யோதா பிக்கப் இந்தியாவில் எல்லாவிதமான வியாபாரங்களுக்கும் மிக நம்பகமான பிக்கப் வாகனம் ஆகும்.

தொடர்பான படைப்புகள்