Loading...
டாடா யோதா பிக்அப்-ன் பயன்பாடுகள்

டாடா யோதா பிக்கப் அப்ளிகேஷன்கள்

நிர்வாகி | Jun 19, 2019 6:13 pm
பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாடா யோதா பிக்கப் ஒரு சிறப்பான செயல்பாடுடைய கமர்ஷியல் டிரக் ஆகும், இது லாஸ்ட் மைல் போக்குவரத்து தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறது. இது எந்தவகையான பிசினஸாக இருந்தாலும் பொறுந்தி விடுகிறது; அது பிரஷான பொருட்களான காய்கறிகள் மற்றும் மீன் போன்றவைகள் அல்லது கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களில் பயன்படுத்தும்படியான எளிய சேவை வாகனமாக பயன்படுகிறது. இதன் பெரிய அளவு எரிபொருள் டேங்க் கெப்பாசிட்ட் 45 லிட்டர்கள் கொள்ளவு கொண்டது இதனால் தூரமான பயணங்களை கவலையின்றி மேற்கொள்ளலாம். இந்த உறுதியான எஸ் யூவி வகை வாகனம் டாடா 4 எஸ்பி சிஆர் டிசிஐசி 4 சிலிண்டர் பிஎஸ் IV என்ஜின் கொண்டது இது அதிகப்படியாக 80கிமி/ மணிக்கு என்ற வேகத்தில் போகிறது.

இதில் பவர் ஸ்டியரிங், அட்ஜஸ்ட்டிபிள் ஸ்டியரிங் காளம், மற்றும் கிரேடபிளிட்டி 30% ஆக இருக்கிறது, அதனால் யோதா பிக்கப் மிக எளிதாக மலைப்பாங்கான மற்றும் செங்குத்தான சரிவுகளில் மிக எளிதாக போகிறது. வாரண்ட்டி வைத்துப் பார்த்தால், இது 3 இலட்சம் கிமீ அல்லது 3 ஆண்டுகள் இதில் எது முன்னதோ அதன்படி வழங்கப்படுகிறது – இது சகல விதமான கார்கோ பணிகளுக்கு மற்றும் தூரமான பயணங்களுக்கு டிரைவர்களின் சவுகரியத்துக்கும் உகந்ததாக இருக்கிறது. இதன் கேபின்கள் 4X4 மற்றும் 4X 2 என்ற ஆப்ஷனிலும் கிடைக்கிறது இதனால் தூரமான பயணங்களின் போது டிரைவர்கள் சவுகரியாமாக இருக்கும்படி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா யோதா பிக்கப் வாகனம் இந்த வகை வாகனங்களில் மிகவும் சிறந்ததாக இருக்கிறது, இதன் பேலோட் திறன் 1250 கிகி ஆகும் இதனால் இது பலவகையான பிசினஸ் பணிகளில் பயன்படுத்த பொறுத்தமானதாக இருக்கிறது. இதன் தட்டையான லோடிங் பரப்பு மிக எளிதாக பொருட்களை லோட் செய்ய சவுகரியமாக இருக்கிறது மேலும் இது கார்கோ வகை வாகனங்களில் அதிக இட-வசதியுள்ள வாகனங்களில் சிறந்தது என்று குறிப்பிடலாம்.

டாடா யோதா பிக்கப் சர்வதேசிய பாதுகாப்பு ஸ்டாண்டர்டு விஷயங்களை கவனத்தில் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கிறது. இதன் ஆண்டிரோல் பார்கள் அதிகப்படியான லோடிங் நிலையிலும் ஒரு ஸ்திர தன்மையைக் கொடுக்கிறது, வேகமானப் போக்கு மற்றும் ஆஃப் ரோடு நிலையிலும் கூட உறுதியைக் கொடுக்கிறது. இதனுள்ளே கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு 3 லேயர்களான பாடி கட்டுமானம், கிரப்பள் ஜோன்கள், கொலப்சிபிள் ஸ்டியரிங் காளம், செண்ட்ரல் லாக்கிங், ரீக்டிராக்டபிள் சீட் பெல்ட்கள் சிறப்பம்சங்கள் ஆகும் மற்றும் சைட் இண்ட்ருஷன் பீம்கள் என அனைத்தும் பக்கவாட்டில் மோதுகின்ற சூழ்நிலைகளில் பயணிகளுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது

இதன் கிராவுண்ட் கிளியரன்ஸ் 210 மிமி (8.3 இஞ்ச்கள்) இதனால் மிக எளிதாக நேவிகேட் செய்து கொள்ள முடியும் மேலும் ஒழுங்கற்ற அல்லது தண்ணீர் நிரம்பிய மலைப்பாங்கான இடங்களிலும் சவுகரியாமாக இருக்கிறது.

அதனால் நீங்கள் எந்த வகையான கார்கோவை ஏற்றிச் செல்ல வேண்டுமானாலும் டாடா யோதா பிக்கப் எப்பொழுதும் மிக உறுதியான வகையில் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, இதன் செய்நேர்த்தி, உறுதி மற்றும் நம்பிககியான பார்ட்னர் ஆகியன – எவ்வகை சீதோஷ்ணநிலையாக இருந்தாலும் சரி அல்லது மலைப்பாங்கான இடமாக இருந்தாலும் சரி, இதன் பணி சிறப்பாகவே இருக்கிறது!

தொடர்பான படைப்புகள்