Loading...
சிறந்த பிக்அப் வாகனம்

டாடா பிக்கப் ட்ரக்குகள் – மிகச் சிறந்த பிக்கப் வாகனம் எது

நிர்வாகி | Jun 28, 2019 6:23 pm
பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

வர்த்தக வாகன வகைகளில் வெற்றிகரமான பிராண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகப்படுத்தியதால், இந்திய வாகனத் தொழில் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் மிகவும் அதிகம் விற்பனையாகின்றன.

சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவில் வாகன உற்பத்தி தொழில் தனது இலக்கை எட்டிவிட்டது. இதற்காக அருமையான பல பிக்கப் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மஹிந்திரா போலேரோ, மஹிந்திரா இம்பீரியோ மற்றுன் டாடா யோதா பிக்கப். இவை மிகச் சிறந்த யுடிலிட்டி வாகனங்கள் ஆகும். இவை இந்திய சாலைகளில் வெற்றிகரமாக ஓடி, தமது சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மிகச் சிறந்த சேவைகளைத் தருகிறது.

தற்போது உயர் ரக பிக்கப் ட்ரக்குகளின் ரேஞ்ஜ் மூலம் இந்திய சந்தைகள் மிக சிறப்பாக இருக்கின்றன. இதில் டாடா மோட்டர்ஸ் நிறுவனம் தனது அட்டகாசமான டாடா யோத பிக்கப் மூலம் முன்னணியில் இருக்கிறது. இது வலிமைக்கும், நீடித்துழைக்கும் தன்மைக்காக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஸ்டைலான யோதா பிக்கப் இணையற செயல்திறனைத் தருகிறது. எனவே இந்திய வாகனத் தொழிலில் இது மிக உயர்ந்த வாகனங்களில் ஒன்றாக இருக்கிறது.

டாடா யோதா பிக்கப்பின் முன்னேற்றமான மற்றும் அசத்தும் சிறப்பம்சங்கள் இந்தியாவில் மற்ற பிக்கப்புகளைவிட போட்டி அளவில் முன்னணியில் இருக்கிறது. இன்று விவசாய பொருள்கள் போக்குவரத்து, பால் பண்ணை பொருள்கள், மீன் வியாபாரம், பால் வியாபாரம், பார்சல்/கூரியர், வெள்ளை கூட்ஸ், கேஷ் வேன், கட்டுமான பொருள்கள், சுரங்கங்கள் மற்றும் இதர உள் நிறுவன சேவைக்கு உதவும் வாகனங்கள் போன்ற வர்த்தக இயக்கங்களுக்கு யோதா பிக்கப் மிகவும் ஏற்றது.

யோதா பிக்கப் பல வகைகளில் கிடைக்கிறது 4x2 மற்றும் 4x4. இவற்றில் சிங்கிள் மற்றும் டபுள் கேபின் தேர்வுகள் உள்ளன. இவற்றின் சுமை ஏற்றும் திறன் 1500 கிலோ. இவ்வகையில் மிக ஸ்மார்ட்டான பிக்கப்பில் காமன் ரெயில் டீசல் என்ஜினின் சக்தி உள்ளது. இது மிக உயர் சக்தி கொண்ட டார்க்கைத் தருகிறது. அதாவது லோடு ஏற்றிய நிலையில் சிறந்த பிக்கப்பிற்காக 1000-2000 சுழற்சி/நிமிடம் என்ற ஃபிளாட் கர்வ் அளவில் 250 nMடார்க்கைத் தருகிறது.

இதில் BS-IV எமிஷன் பொருத்தப்பட்டுள்ளது. யோதா சுற்றுச்சூழலுக்கு எற்றவாறு செயல்படுகிறது. மாசுகளை கணிசமாக குறைக்கிறது. எரிபொருள் சிக்கனம் கொண்ட என்ஜினுடன் 45.1 லிட்டர் கொண்ட எரிபொருள் டேங்கும் இருப்பதால் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றது. மேலும் டர்போ-சார்ஜ்டு டீசல் என்ஜின் இருப்பதால் வேகமான பிக்கப் கிடைக்கிறது.

இதில் 30% கிரேடபிலிட்டி இருப்பதால் வெவ்வேறுவிதமான சரிவுகள் மற்றும் நில அமைப்புகளில் ஏறுவதற்கு மிக பாதுகாப்பாக இருக்கிறது.

இந்த ஸ்மார்ட் பிக்-அப் உலக பாதுகாப்புத் தர நிர்ணயங்களின்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆண்டிரோல் பார்ஸ் சிறந்த ஸ்திரத்தன்மையைத் அருகிறது. மேலும் இவற்றிலுள்ள சிறப்பம்சங்கள்ஒப்பற்ற 3-லேயர்டு பாடி கட்டமைப்பு, கிரம்பிள் ஜோன்ஸ், டில்டபிள் ஸ்டியரிங் காலம், ரிட்ராக்டபிள் சீட் பெல்ட், பக்கவாட்டிலிருந்து மோதல் ஏற்பட்டால் பாதுகாபுத் தரக்கூடிய சைடு இன்ட்ரூஷன் பீம்ஸ் போன்றவை உள்ளன.

மேலும் ஒரு முக்கிய காரணி, மஹிந்திரா போலேரோ பிக்கப்புகளைக் காட்டிலும் டாடா யோதா மிகவும் சிக்கனமான மற்றும் எரிபொருள் சிக்கனம் கொண்ட வாகனம் ஆகும். மேலும் இதற்கு சந்தை மிக அதிக தேவை இருக்கிறது. இன்னும் அதிகமான வாடிக்கையாளர்கள் யோதாவை வாங்குகிறார்கள். ஏனென்றால் இது மஹிந்திரா போலேரோவைக் காட்டிலும் மிகவும் வலிமையும் செயல்திறனும் கொண்டது.

டாடா யோதா பிக்கப் சிறப்பம்சங்களில் அழகும், கட்டுறுதியும் இருக்கின்றன. இது பலவிதமான லோடுகளையும், சரக்குகளையும் பலவிதமான நிலவரங்களில் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இதில் தாரளமான இடவசதியும், ஏற்றுவதற்கான உயரமும் இருப்பதால், யோதா பிக்கப் இந்திய சாலைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தொடர்பான படைப்புகள்