Loading...
டாடா ஜெனான் மற்றும் யோதா

டாடா ஜெனான் பிக்கப் மற்றும் டாடா ஜெனான் யோதா பிக்கப் – இதன் வேறுபாடு

நிர்வாகி | Jun 19, 2019 3:38 pm
பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்
டாடா ஜெனான் பிக்அப் மற்றும் டாடா ஜெனான் யோதா பிக்அப்
டாடா ஜெனான் பிக்அப் மற்றும் டாடா ஜெனான் யோதா பிக்அப்

டாடா ஏஸ் அறிமுகப் படுத்தப்பட்ட பின்னர், டாடா மோட்டர்ஸ் அடுத்த அடியாக இதைவிட மேன்மையான அட்வான்ஸ் கமர்ஷியல் வாகனங்களை உருவாக்கத் துவங்கி விட்டது - டாடா ஜெனான் பிக்கப் மற்றும் ஜெனான் யோதா பிக்கப் என்று பிக்கப் டிரக்குகளில் புதிய வாகனம்.

இது மிகவும் உறுதியானது மற்ற வாகனங்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது, டாடா ஜெனான் பிக்கப் மற்றும் ஜெனான் யோதா பிக்கக் இரண்டும் தனித்துவமான அம்சங்கள் மற்றும் சிறப்பான்மைகளுடன் வருகிறது.

டாடா ஜெனான் பிக்கப் அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்: இதுவொரு மேம்படுத்தப்பட்ட பயணிகள் டிரக் ஆகும், டாடா ஜெனான் பிக்கப் இப்பொழுது சிங்கிள் மற்றும் டபுள் கேபின்களுடன் சர்வதேசிய அளவில் சிறப்பான அம்சங்களுடன் பாதுகாப்பு மற்றும் சவுகரியத்துடன் கிடைக்கிறது.

டாடா ஜெனான் பிக்கப் டிரக்கின் சேஸிஸ் டெம்ப்ராமெண்ட்டல் டிராப்பிகல் சீதோஷ்ணநிலைகளிலும் தாக்குபிடிக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் கடினமான மலைப்பாங்கான இடங்களில் மிகவும் எளிதாக ஏறி விடும் உறுதி கொண்டதாக இருக்கிறது. இதுவொரு உறுதியான பிக்கப் டிரக் மற்றும் இதன் மானோயுவேர் ஆற்றல் எப்படிப்பட்ட ரோடாக இருந்தாலும் எளிதாக திருப்பிக் கொள்ளும்படியானது. இதனுடைய மோட்டரைஸ்டு கிளியரான ஹெட்லேம்ப்கள் அதன் தோற்றத்துக்கு பொலிவைக் கொடுக்கிறது, மேலும் இந்திய சாலைகளில் இந்த டிரக்கை சிறந்த பயணிகள் டிரக்காக ஆக்குகிறது.

டாடா ஜெனான் பிக்க என்பது பிஎஸ் - III ஸ்டாண்டர்டு வகை எமிஷன் கொண்டது , மேலும் ஜெனான் யோதா பிக்கப் இதனைத் தொடர்ந்து பிஎஸ் IV வகையாக மேம்படுத்தப் பட்டுள்ளது, இது சுற்றுச்சூழலில் மிகவும் எளிமையான வாகனமாக்குகிறது மற்றும் சிறப்பான மைலேஜை பாலைவனப்பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களிலும் கொடுக்கிறது.

எரிபொருள் டேங்க் பற்றிச் சொல்லப்போனால், ஜெனான் பிக்கப் பேக்ஸ் அதிகப்படியான வால்யூமாக 65 லிட்டர் பிடிக்கிறது இது யோதா பிக்கப் 45 லிட்டரை விட அதிகமானது என்று அறியலாம். மேலும் இது அதிகமான வேகம் ( 120 கிமீ/மணிக்கு) கொண்டது மற்ற யோதா பிக்கப்கள் 80 கிமீ/மணிக்கு என்ற உச்ச வேகத்தில் முழுமையான கார்கோ நிரப்பியபடி போகக் கூடியது.

மேலும், யோதா பிக்கப் மிகவும் அகலமானது மற்றும் பளுவான வாகனம் ஆகும், இதன் இண்டர்னல் பாடி 2550 மிமி ( 8.4 அடி) X 1750 மிமி (5.7 அடி) என்ற அளவைக் கொண்டது, மற்ற ஜெனான் பிக்கப் டிரக்குகள் இத்துடன் ஒப்பிடுகையில் 1440 மிமி ( 4.7 அடி) X 1410 மிமி (4.6 அடி) என்ற அளவில் உள்ளது. இதுதான் யோதா பிக்கப்பை அதிகப்படியான எடை கூடிய லோட்களை எடுத்துச் செல்ல மிகவும் பொறுத்தமானதாக ஆக்குகிறது – மற்றும் இது மிகவும் ஸ்பேலாகவும் இருக்கிறது. அதனால் லோதா பிக்கப் வாகனத்தின் பேலோட் திறன் சிறப்பானது, 1500கிகிகள் வரைத் தாங்கக் கூடியது, மேலும் பல ஆற்றல்மிக்க சரக்கு வாகனங்கள் அதிகபட்சமாக 1030 கிகி மட்டுமே எடுத்துச் செல்லக் கூடியது என்பதை ஒப்பிட்டு அறிந்து கொள்ளலாம்.

ஜெனான் யோதா பிக்கப் வாகனத்தின் 30% கிரேட்-ஏபிலிட்டி மூலமாக இது மிக எளிதான முறையில் செங்குத்தான மலைப்பாங்கான பகுதிகளில் ஏறி விடுகிறது என்பது உறுதியாகச் சொல்ல முடியும். இது ஒழுங்கற்ற சாலைகளிலும் எந்த தடங்களும் இன்றி பயணித்து மிகச் சிறப்பான ஒரு செயல்பாட்டக் கொடுக்கிறது. இதன் சாசிஸ்சில் அதிக லோடிங் இடவசதி உள்ளது மற்றும் சவுகரியமான மற்றும் பாதுகாப்பான டிரைவர் கேபின் இருப்பதனால் டிரைவர் மகிழ்ச்சியுடன் பணியாற்றுகிறார். இதுதான் ஜெனான் யோதா பிக்கப் வாகனத்தை இன்னும் சிறப்பானதொரு பணிக்குதிரையாக மாற்றுகிறது – ஜெனான் பிக்கப் பிரைவேட் பயண்பாட்டிற்கும் பிசினஸ்க்கு என இரண்டுக்கு பொறுத்தமானது மற்றும் யோதா பிக்கப் பெரும்பாலும் கமர்ஷியல் பணிகளுக்கு சிறந்தது ஆகும்."

தொடர்பான படைப்புகள்