Loading...
டாடா யோதா பிக்கப்- இந்தியாவில் டாடா மோட்டர்ஸின் அதிக செயல்திறன் கொண்ட பிக்கப்

டாடா யோதா பிக்கப்- இந்தியாவில் டாடா மோட்டர்ஸின் அதிக செயல்திறன் கொண்ட பிக்கப்

நிர்வாகி | Jul 1, 2019 7:25 am
பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாடா மோட்டர்ஸின் அதிக செயல்திறன் கொண்ட குதிரையான யோதா பற்றி அதிகம் பேசப்பட்டு எழுதப்பட்டுவிட்டது.

சர்வதேச தரம் கொண்டபிக்கப்பான இது உயர் அளவில் செயல்திறனைத் தருகிறது. யோதா இப்போது சிங்கிள் கேப் மற்றும் டபுள் கேப் வகைகளில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.6.45 லட்சம் ஆகும். ஆனால் இதை நீங்கள் எங்கு வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

இது 4x4 மற்றும் 4x2 வகைகளில் கிடைக்கிறது. இது பலவிதமான வர்த்தகப் பயன்பாடுகளுக்கு ஏற்றது.

இதன் க்ளோஸியான சேஸி மற்றும் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட சௌகரியமான உட்புறங்களால் டாடா யோதா பிக்கப் தனது பயன்பாட்டாளர்களுக்கு தினமும் ஓட்டுவதற்காக ஒரு அருமையான அனுபவத்தைத் தருகிறது. அசத்தும் வடிவமைப்பு ஒரு முறை பார்த்தாலே உங்களைக் கவரும். நடைமுறை மற்றும் செயல்திறன் மிகச் சரியாக ஒன்றிணைந்துள்ள டாடா யோதா பிக்கப் ஆண்மைத்தனமான எஸ்யூவி தோற்றத்திற்கு இணையாக அசத்தலான தோற்றம் கொண்டுள்ளது. இந்த தோற்றத்தை மேலும் மேம்படுத்தும்விதமாக பாடிகலர் ஃபிரண்ட் பம்பர் மற்றும் ஸ்லீக் ஏரோ டைனமிக் பாடி லைன் இருக்கின்றன.

பயன்பாட்டைப் பொறுத்த வரையில் டாடா யோதா பிக்கப் உங்களுக்கு பவர் ஸ்டியரிங் மற்றும் அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீல் உடன் கூடிய சிறந்த கேபின் சௌகரியத்தைத் தருகிறது. இதன் உட்புறமும் ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்ட கேபினுடன் வருகிறது. இது சௌகரியமாக ஓட்டுவதற்கு மிகவும் ஏற்றது. இதில் வாகனம் நிற்கும் நேரத்தில், ஓய்வெடுப்பதற்காக சௌகரியமான லே டவுன் டிரைவர் சீட்டும், கோ டிரைவர் சீட்டுக்களும் உள்ளன. இதன் கேபினில் பிரகாசமான விளக்குகள், கார் போன்ற ரூஃப் கிளாடிங், ஒரு மொபைல் சார்ஜிங் பாயிண்ட், மியூசிக் சிஸ்டத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் அழகிற்காக முழுமையான கார்பெட் ஃபுளோரிங் கொண்டது.

பின் வரும் அட்டவணையில் வெவ்வேறுவிதமான டாடா யோதா பிக்கப் வகைகளின் ஒப்பீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

யோதா சிங்கிள் கேப் (4 x 4 ) யோதா ஈகோ யோதாக்ரூ கேபின் யோதா ப்ளஸ் 1500 (சிங்கிள் கேப்)
என்ஜின் வகை டாடா 4SP CR 4 சிலிண்டர் BSIV டாடா 4SP CR 4 cylinder BSIV டாடா 2.2L டைகார் BS IV டாடா 4SPCR TCIC 4 சிலிண்டர் BSIV
என்ஜின் திறன் CC 2956 CC 2956 CC 2956 CC 2956 CC
அதிகபட்ச என்ஜின் அவுட்புட் 64 kW (85Hp) @ 3000 r/min 64 kW (85Hp) @ 3000 r/min 64 kW(85 Ps) at 3000 r/min 64 kW(85Hp) @ 3000 r/min
அதிகபட்ச என்ஜின் டார்க் 250 Nm@1000 - 2000 r/min 250 Nm@1000 - 2000 r/min 250 Nm at 1000 - 2000 r/min 250 Nm@1000 - 2000 r/min
கிரேடபிலிட்டி 30% 30% 30% 30%
எரிபொருள் டேங்க் கொள்ளளவு 45 லி 45 லி 65 லி 45 லி
லோடட் பாடி 8.4 அடி. x 5.7 அடி 8.4 அடி.x 5.6 அடி 5.84 அடி. x 5.74 அடி 8.4 அடி. x 5.7 அடி
பே லோடு 1040 கிலோ 1140 கிலோ 1020 கிலோ 1500 கிலோ
கிரவுண்டு கிளியரன்ஸ் (மி.மீ) 210 210 210 210
சீட்டின் எண்ணிக்கை ட்ரைவர் + 1 ட்ரைவர் + 1 ட்ரைவர் + 4 ட்ரைவர் + 1

நீங்கள் எந்த வகையைத் தேர்வு செய்தாலும், போட்டி வாகனங்களைவிட டாடா யோதாவில் பல அனுகூலங்கள் இருக்கின்றன - அதிக கொள்ளளவு எரிபொருள் டேங்க், சிறந்த மைலேஜிற்காக மற்றும் பிளை ஆயுளுக்காக பெரிய டயர்கள், இவ்வகையில் சிறந்த கிரவுண்டு கிளியரன்ஸ் மற்றும் பல.

தொடர்பான படைப்புகள்