Loading...
டாடா யோதா பிக்அப்

டாடா யோதா பிக்கப் – இந்தியாவின் மிக உறுதியான வர்த்தக பிக்கப் வாகனம்.

நிர்வாகி | Jun 28, 2019 6:34 pm
பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

இந்தியாவின் சர்வதேச தரமுள்ள பிக்கப்

டாடா யோதா பிக்கப்பில் அகலமான லோடு பாடி மற்றும் ஸ்ட்ரிங் அக்ரகேட்ஸ் இருப்பதால் அதிக வருமானத்திற்கு உறுதி செய்கிறது. இயக்க செலவு குறைவாகவும், எரிபொருள் சிக்கனத்துடன் அதிக மைலேஜ் இருப்பதாலும், சர்வீஸிற்கான கால இடைவெளி அதிகமாக இருப்பதாலும், யோதா பிக் வாகன பயன்பாட்டாளர்கள் மஹிந்திரா போலேரோ பயன்பாட்டாளர்களைவிட அதிக லாபம் பெறுகிறார்கள்.

டாடா யோதா பிக்கப்பில் அதிக அளவு செயல்திறன் மற்றும் குறைவான பராமரிப்பு செலவு இருக்கிறது. எனவே இது இந்தியாவின் மிகச் சிறந்த பிக்கப் வாகனமாகத் திகழ்கிறது.

இது 4x4 மற்றும் 4x2 தேர்வுகளில் கிடைக்கிறது. மேலும் இதில்க் லோடு எற்றும் திறனிருக்கிறது. இது பலவிதமான வர்த்தக பயன்பாட்டிற்கு ஏற்றது. இதில் ஆன்டிரோல்பார் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஸ்திரத்தன்மை, பெரிய 16 அங்குல ரேடியல் டயர்கள், நிரூபிக்கப்பட்ட ட்ரைவ்லைன் அக்ரகேட்ஸ் இருக்கின்றன. இவை அனைத்துவிதமான லோடிங் மற்றும் நில அமைப்பின் தேவைகளுக்கு மிகவும் ஏற்றது.

டாடா யோதா பிக்கபில் 210 மி.மீ. என்ற மிகச் சிறந்த கிரவுண்டு க்ளியரன்ஸ் இருக்கிறது. எனவே மிக சமமான சாலைகளிலும், கிராமப்புற கரடு முரடான சாலைகளிலும், தடையில்லாமல் ஓட்ட முடிகிறது. டாடா 4 சிலிண்டர் காமன் ரெயில் என்ஜின் இருக்கிறது. இது மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தைத் தருகிறது. இந்த என்ஜின் 64 kW(85 Hp) @ 3000 r/min என்ற சக்தியை வெளியிடுகிறது. மேலும் லோடிங் நிலவரத்தின் கீழ் சிறந்த பிக்கப்பிற்காக 1000-2000 r/minல் 250 Nm டார்க்கைத் தருகிறது. இதனால் குறைவான கியர் ஷிஃபிடிங்கில் சிறந்த மைலேஜ் தருகிறது.

டாடா யோதாவில் மிக நம்பகமான உறுதியான கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்லது. இதில் ஒவர்ட்ரைவ் கியரும் இருக்கிறது. டாடா யோதா பிக்கப் குறியீடுகள் இதிலுள்ள அனுகூலங்களில் ஒன்றாகும். இதில் 30% ஹை கிரேடபிலிட்டி உள்ளது எனவே எவ்விதமான நில அமைப்புகளிலும், லோடைத் தாங்கிக்காண்டு மேலே ஏறுகிறது.. இ தற்கு ஆதரவாக உறுதியான மற்றும் வலிமையான 16 அங்குலம் அகலமான டயர்கள் உள்ளன. இதில் உட்புற லோடு பாடியின் அளவு 2550 மி.மீ. (8.4 அடி) X 1750 மி.மீ. (5.7அடி). நீடித்துழைகும் இதன் பாடிக்கு ரீயின்ஃபோர்ஸ்மெண்ட் உடன் கூடிய 4 மி.மீ. சேஸி ஃபிரேம், யூனிடைஸ்டு டபுள் ஸ்பிரிங் கொண்ட பின் ஆக்ஸில் மற்றும் முன்பக்கம் 6 லீவ்ஸ் மற்றும் பின்பக்கம்ம் 9 லீவ்ஸ் ஜொண்ட லீஃப் ஸ்ப்ரீங் சஸ்பெஷன் ஆதரவாக இருக்கிறது. இதன் மூலம் லோட் செய்யப்பட்ட நிலவரங்களில் சிறந்த பாதுகாப்பு கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக அதிக வேகத்தில்.

தொடர்பான படைப்புகள்