Loading...
மலைப்பகுதிக்கான சிறந்த பிக்அப்

டாடா யோதா பிக்கப் – மலை நிலங்களுக்காக டாடா மோட்டர்ஸின் சிறந்த பிக்கப்.

நிர்வாகி | Jul 1, 2019 7:54 am
பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

மலை நிலங்களுக்காக சிறந்த பிக்கப்.

டாடா மோட்டர்ஸ் தயாரிப்புகளில் டாடா யோதா பிக்அப் சமீபத்திய வாகனம் ஆகும். இந்த ஸ்டைலான பிக்கப்பில் உயர் செயல்திறனும், குறைவான பராமரிப்பு செலவும் உள்ளது. டாடா யோதா பிக்கப் உங்களுக்கு இந்தியாவின் கடுமையான நில அமைப்புகளில் ஓடும் என்ற உறுதி அளிக்கிறது.

டாடா யோதா பிக்கப் மாடல் சிங்கிள் கேப் மற்றும் க்ரீன் கேபின் வகைகளில் கிடைக்கிறது. இதில் 4x2 மற்றும் 4x4 ட்ரைவ் தேர்வுகள் உள்ளன. இதன் விலை குறைவானது. அதாவது 6.45 ரூபாயிலிருந்து ஆரம்பம் (எக்ஸ் ஷோரூம்). இது பிக்கப் சந்தையில் மற்ற வாகனங்களைவிட குறைவான விலையுள்ள வாகன ஆகும். இந்த வாகனம் சர்வதேச மற்றும் ஏரோ டைனமிக் வடிமைப்புடனும், ஆண்மைத் தோற்றம் கொண்ட கேபின் கொண்ட க்ளீன் பாடி லைனுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

டாடா யோதா பிக்கப்- மலைபுற நிலங்களுக்கு ஏற்ற தேர்வு

யோதா ப்ளஸ் 1500 என்பது தற்போது சந்தையில் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த பிக்கப் ஆகும். இதில் டாடா 4SPCR TCIC 4 சிலிண்டர் BSIV என்ஜின் உள்ளது. இது 85HP சக்தியை மற்றும் 250 nM டார்க்கைத் தருகிறது. இதன் கிரண்டு க்ளியரன்ஸ் 210 மி.மீ. என்ற அளவில் மிகவும் சிறந்தது. இதன் ஆன்டி ரோல் பார்கள் இந்த வாகனத்திற்கு எந்த ஒரு நில அமைப்பிலும் சிறந்த ஸ்திரத் தன்மையைத் தருகிறது. மிகப் பெரிய 16 அங்குல ட்யூப்லெஸ் ரேடியல் டயர்களின் அளவு மிக நேர்த்தியாகவும், தடையில்லாமலும் ஓட்ட உதவுகிறது. இதன் 30% கிரேடபிலிட்டியால் எந்த ஒரு நில அமைப்பிலும் முழுவதுமாக லோடு ஏற்றிய நிலையில் சிறப்பாக பயணிக்க உதவுகிறது.

யோதா ப்ளஸ் 1500 ல் அதிகபட்ச லோடிங் திறன் 1500 கிலோ. ஆனால் இதன் 6 லீஃப் செமி-எலிப்டிகல் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் இருப்பதால் மிக கனமான லோடை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்லும்போது வாகனம் ஸ்திரமாக இருக்கிறது. இதன் 8.4 அடி x 5.6 அடி அகலம் கொண்ட உட்புற பாடி சரக்கு ஏற்றிச் செல்ல அதிக இட வசதியைத் தருகிறது. இந்த பிக்கப்பில் உறுதியான கியர் பாக்ஸ் இருப்பதால், இது லோடு ஏற்றிய நிலையில், குறைவான கியர் ஷிஃப்ட்டுகளிடன் சிறப்பான பிக்கப் தருகிறது.

யோதா பிக்கப் பலவிதமான வர்த்தகப் பயன்பாடுகளுக்கு ஏற்றது. இது பால், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற வேளாண்மை பொருட்கள் இகாமர்ஸ் மற்றும் எஃப்எம்சிஜி பொருள்களை ஏற்றிச் செல்வதற்கு மிகவும் ஏற்றது. ஓட்டு மொத்தமாக பார்க்கும்போது யோதா பிக்கப் வியாபரத்திற்கு மிக லாபகரமான வாகனம் ஆகும். இது பலவிதமான சாலைகளில், பலவிதமான வானிலைகளில் சிறப்பாக ஓடக்கூடியது.

தொடர்பான படைப்புகள்