லோடிங்...

பிரைவஸி பாலிஸி

டாடா மோட்டர்ஸ் லிமிடெட் இதற்குப் பின் இந்த ஆவணத்தில் (டிஎம் எல்) என்று சுருக்கமாக குறிப்பிடப் படும், இது உங்களுடைய பர்சனல் தகவல்களை பிரைவஸி மற்றும் பாதுகாப்புக்கு உறுதியளிக்கிறது. எங்களுடைய பிசினஸ் புராசஸில் உங்களுடைய பர்சனல் தகவல்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து உங்கள் பிரைவஸியைப் பாதுகாத்து தகவலைப் பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. எந்தெந்த நாடுகளில் எங்களுடைய இணையத்தளம் செயல்படுகிறதோ அங்கிருந்தெல்லாம் சேகரிக்கப்படும் பர்சனல் தகவல்களை அதாவது பொதுமக்கள் வருகை தரும்போதெல்லாம் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு சேகரிக்கும் தகவல்களை மிகப் பாதுகாப்பாக வைக்கிறோம்

இந்த பிரைவஸி அறிக்கை விளக்குவது என்னவென்றால் இணையத்தளத்தின் மூலமாக உங்களைப் பற்றி சேகரிப்பட்ட விபரங்கள் அனைத்தும், எப்படி பயன்படுத்தப் படுகின்றன, மெயிண்டெய்ன் செய்யப்படுகின்றன, பகிரப்படுகின்றன, மற்றும் பாதுகாக்கவும் இறுதியாக எப்படி அப்டேட் நீங்கள் அப்டேட் செய்து கொள்ளவும் முடியும் என்பதை விளக்குகிறது. இந்த விதிமுறைகள் ஈரோப்பியன் இகனாமிக் ஏரியா (“EEA”) விலிருந்து டிஎம் எல் மூலமாக சேகரிக்கப்பட்ட பர்சனல் தகவல்களுக்கும் இந்த விதிகள் பொறுந்தும், அது எந்த ஃபார்மெட்டில் இருந்தாலும் சரி, அது எலக்ட்ரானிக்காக அல்லது காகிதத்தின் விபரமாக. இது போஸ்ட் செய்யப்பட்ட தகவல்கள் கிடைத்த தினத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்படுவது துவங்குகிறது.

நாங்கள் சேகரிக்கும் பர்சனல் தகவல்கள்

பர்சனல் தகவல் என்கிற தகவல் டிஎம் எல் நிறுவனம் உங்களைப் பற்றிய சிறப்பு விபரங்களை தெரிந்து கொள்ள மற்றும் இதன் அடிப்படையில் உங்கள் தேவைகளைப் பற்றி அறிய, தொடர்பு அல்லது உங்கள் இருப்பிடம் அறிய ( உதாரணமாக பெயர், வயது, பாலினம், அஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி) என அனைத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. உங்களைப் பற்றியத் தகவல்களை நாங்கள் கணக்கெடுப்பு, சில நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யும் போது, பர்சனைஸ்டு சேவைகளுக்காக தகவல்களை பதிவு செய்யும் போது, புராடக்ட்களைப் பற்றிய விபரங்களுக்காக பதிவு செய்யும்போது அல்லது எங்கள் சேவையை அல்லது வாடிக்கையாளர் ஆதரவுக்காக பதிவு செய்யும் போது என்று பல நிலைகளில் உங்கள் தகவல்கள் கிடைக்கின்றன. மேலும் நாங்கள் பல சந்தர்ப்பங்களில் உங்களுடைய பர்சனல் தகவல்களைக் கேட்டுப் பெறுகிறோம் குறிப்பாக உங்கள் பெயர், முகவரி, ஜிப் கோட், தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஐபி அட்ரஸ், லொகேஷன் டேட்டா, உங்களுடைய டிவைஸ் மற்றும் பல குறித்த தகவல்களைப் பெறுகிறோம். டிஎம் எல் உங்களைப் பற்றிய அனைத்து பர்சனல் தகவல்களையும் வைத்திருப்பதில்லை, மாறாக உங்களிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட தகவல்கள் மட்டுமே, குறிப்பாக, உங்களுடைய முதலாளி அல்லது நீங்கள் பணியாற்றும் நிறுவனம் ஆகியவற்றிடமிருந்தும் பெறப்படுகிறது. மேலும் டிஎம் எல் உங்களுடன் டிஎம் எல் இந்த இணையத்தளத்துடன் இண்டராக்ட் செய்கையில் மற்றும்/ அல்லது இந்த தளத்தில் குறிப்பிட்டுள்ள சேவைகளை நீங்கள் பயன்படுத்துகையில். உதாரணத்திற்கு:

 • ஒருவேளை நீங்கள் வேலைக்காக விண்ணப்பிக்கிறீர்கள் அல்லது பிற ஸ்டாஃபிங் வாய்ப்புக்காக ஒரு இணையத்தளத்தின் மூலமாக விண்ணப்பித்தால், உங்களுடைய ரெசூமை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படும் மற்றும் உங்களுடைய தொடர்பு விபரங்கள் குறிப்பாக மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் தபால் முகவரியும் கேட்கப் படுகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள பணி வாய்ப்பு குறித்த தகவலைத் தெரிவிக்க நாங்கள் இந்த தகவலைப் பயன்படுத்துகிறோம் என்று குறிப்பிடுகிறோம், மேலும் இந்த தகவல்களின் மூலமாக வேறு பல ஸ்டாஃபின் வாய்ப்புகள் மற்றும் இந்த தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் குறித்தும் உங்களுக்கு அறிவிக்க பயன்படுத்துகிறோம்.
 • நாங்கள் தர்டு பார்ட்டி சேவை வழங்குபவர்களை எங்கள் இணையத்தளத்தின் சில அம்சங்கள் குறித்து உதவுவதற்காக பணியில் அமர்த்துகிறோம். எங்களுடைய சேவை வழங்குபவர்கள் எங்களிடமிருந்து பெற்றத் தகவல்களைப் பயன்படுத்துகிறார்கள் ஆனால் அவர்கள் இந்த தகவல்களை பயன்படுத்த அனுமதிகப்படுவதில்லை.
 • இந்த இணையத்தளத்துடன் வேறு சில இண்டராக்‌ஷன்களுக்காக உங்களுடன் தொடர்பில் இருக்க நாங்கள் உங்களுடைய பர்சனல் தகவல்களை வாங்கிக் கொள்கிறோம், மேலும் நீங்கள் இந்த இணையத்தளத்தின் ஏதேனும் கணக்கெடுப்பில் பங்கு கொள்ளும்போது அல்லது நீங்கள் ஒரு பிரச்சனை குறித்து புகார் செய்யும் போது தகவல்களை சேகரிக்கிறோம்.
 • நீங்கள் எங்களுடன் பிசினஸ் செய்ய விரும்பினால் நாங்கள் உங்கள் பர்சனல் தகவல்களை சேகரிக்கிறோம் குறிப்பாக டீலர்ஷிப்/டிஸ்ட்ரிபியூஷன்ஷிப் ( டீலர்/டிஸ்டிரிபியூட்டர் விண்ணப்பங்கள் மூலமாக) பெற்றுக் கொள்கிறோம்.
 • மேலும் நாங்கள் தர்டு பார்ட்டிகளிடமிருந்தும் குறிப்பாக எங்களுடைய பார்ட்னர், சர்வீஸ் புரவைடர்கள் மற்றும் பொதுவாக இருக்கும் இணையத்தளங்களிலிருந்தும் பெறுகிறோம் மேலும் சேவைகளை வழங்குவதற்காக விருப்பத்தின் பெயரில் அல்லது தகவல்களை மிகச் சரியாக பாதுகாக்க வேண்டி, வழங்க மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக என தகவல்களைப் பெறுகிறோம்.

டிஎம் எல் இணையத்தளம் மற்ற இணையத்தளங்களுடன் இணைக்கவும் பட்டுள்ளது. டிஎம் எல் கண்டிப்பாக பிரைவஸி அறிக்கைக்கு பொறுப்பு ஏற்காது அல்லது இப்படியான இணையத்தளங்களில் தகவல்களுக்கும் பொறுப்பேற்காது ஒருவேளை

 • எங்களுடைய இணையத்தளத்தின் வழியாக தர்டு பார்ட்டி இணையத்தளத்தில் நீங்கள் ஆக்சஸ் செய்திருந்தால்; அல்லது
 • தர்டு பார்ட்டி இணையத்தளத்திலிருந்து எங்களுடைய தளத்துக்கு நீங்கள் இணைப்பில் இருந்திருக்கும் நிலையில்.

உங்களுடைய பர்சனல் தகவல்களை எப்படி பயன்படுத்துகிறோம்:

உங்களுடைய பர்சனல் தகவலை நாங்கள் பயன்படுத்துவதற்கான சரியான காரணம் இருந்தால் மட்டுமே அதை பயன்படுத்துவோம். கீழ்காண்பவைகளில் ஏதேனும் ஒன்றுக்கா அல்லது பல காரணங்களுக்காக நாங்கள் பயன்படுத்துகிறோம்:

 • உங்களுடன் நாங்கள் செய்த ஒப்பந்தத்தினை செயல்படுத்துவதற்காக, அல்லது
 • குறிப்பிட்ட சட்ட விஷயத்திற்காக உங்களுடைய பர்சனல் தகவலை பயன்படுத்தலாம், அல்லது
 • உங்கள் அனுமதி கிடைத்தப் பின்னர் பயன்படுத்தலாம், அல்லது
 • அது உங்களுடைய விருப்பங்களில் ஒன்றாக இருக்கின்றன போது அல்லது எங்களுடைய பிசினஸ் அல்லது கமர்ஸியல் காரணங்களுக்காக உங்களுடைய தகவலைப் பயன்படுத்தலாம், ஆனாலும் கூட, நாங்கள் எங்களுடைய விருப்பங்களுக்காக ஒரு பொழுதும் தவறாக பயன்படுத்த மாட்டோம் மேலும் உங்களுக்கு விருப்பமானதை வழங்க பயன்படுத்துகிறோம்.

உங்களுடைய பர்சனல் தகவல்களை நாங்கள் பயன்படுத்த துவங்குவது நீங்கள் எங்களுக்கு கொடுத்திருக்கும் அனுமதியின்படி செய்து கொள்ளப் படுகிறது. டிஎம் எல் எங்களுக்கு கிடைத்துள்ள தகவலை பொதுவான பிசினஸ் பயன்பாட்டிற்காக உங்களுடன் பகிர்கையில் பயன்படுத்துகிறது. இவற்றில் கீழ்காணும் செயல்பாடுகள் எல்லாம் அடங்கும்:

 • உங்களுடைய கோரிக்கைகளுக்கு ரெஸ்பாண்ட் செய்கையில்;
 • உங்களுக்கு சேவிகளை வழங்குகையில் வாடிக்கையாளர் சேவைகள் பிரச்சனைகள் உட்பட;
 • எங்களுடைய தற்போதைய தற்போதைய திட்டங்கள் குறித்து உங்களுக்கு தெரிவிக்க, புதிய திட்டங்கள் அல்லது நாங்கள் புதிதாக உருவாக்கும் புரோமோஷன்கள், மற்றும் உங்களுக்கு அவசியமான பயன்படக் கூடிய வாய்ப்புகள் குறித்து அறிவிக்க;
 • எங்கள் சேவையின் புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள் பற்றித் தெரிவிக்க
 • நீங்கள் விசாரித்திருந்த வேலை வாய்ப்பு அல்லது கரியர் வாய்ப்பு குறித்து உங்களுடன் தொடர்பு கொண்டு விபரங்கள் பகிர;
 • எங்களுடைய இணையத்தளம் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு தெரிவிப்பதற்காக;
 • எங்களுடைய விளம்பரங்கள் மற்றும் திட்டங்களை நீங்களின் மதிப்பீடு அறிய மற்றும் புரிந்து கொள்ள உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
 • மார்க்கெட்டிங் மற்றும் நிகழ்ச்சிகள்: நாங்கள் பர்சனல் தகவல்களைப் பயன்படுத்தி மார்க்கெட்டிங் மற்றும் நிகழ்ச்சி கம்யூனிகேஷன்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறோம் குறிப்பாக பலப்பல பிளாட்பார்ம்களின் மூலமாக அதாவது மின்னஞ்சல், தொலைப்பேசி, குறுஞ்செய்தி அனுப்புதல், நேரடி அஞ்சல்கள் மற்றும் பல ஆன்லைன் ஊடகங்கள் மூலமாக. ஒருவேளை நாங்கள் மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களை அனுப்பினால், அதில் எதிர்காலத்தில் நீங்கள் எவ்வகையான மின்னஞ்சல்களை பெறப் போகிறீர்கள் என்பது குறித்து தெளிவாக குறிப்பிடுகிறோம். நாங்கள் மின்னஞ்சல்களை உங்களுக்கு அனுப்புகையில் அதன் பதில்கள் மற்றும் தொடர்ந்த உரையாடல்களுக்கு உங்களுடைய தகவல்களை மற்றும் மார்க்கெட்டிங் நிலைகளை மெயிண்டெய்ன் செய்கிறோம். தயவு செய்து நீங்கள் மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களைப் பெற விரும்பினால், நாங்கள் கண்டிப்பாக முக்கியமான சேவைகள் குறித்த தகவல்களை உங்கள் இணையத்தள கணக்குகள் மற்றும் சப்ஸ்கிரிப்ஷன் நிலைகளையும் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
 • சட்ட ரீதியான கடமைகள்: பர்சனல் தகவல்களை நாங்கள் லீகலான மற்றும் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம், குறிப்பாக குற்றங்களைத் தடுத்தல், கண்டுபிடித்தல் அல்லது துப்பறிதல் போன்ற காரணங்கள்; இழப்பை தவிர்த்தல்; அல்லது மோசடி ஆகியவைகளைத் தவிர்க்க. எங்களுடைய இண்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் ஆடிட் தேவைகள், செக்யூரிட்டி செயல்பாடுகள், மற்றும் மிகவும் அவசியமான அல்லது பொறுத்தமான விஷயங்களுக்கு மட்டுமே இந்த பர்சனல் தகவல்களைப் பயன்படுத்துகிறோம்:
 • சட்ட விதிகளுக்கு உட்பட்டு, உங்களுடைய நாட்டிற்கு வெளியேயும் கூட;
 • நீதி மன்றங்களிலிருந்து வரும் கோரிக்கைகள், சட்டங்களை அமல்படுத்தும் முகவாமைகள், ரெகுலேட்டரி முகவாமைகள், மற்றும் பிற பொது மற்றும் அரசாங்க அத்தாரிட்டிகள், இவைகள் நாட்டிற்கு வெளியே உள்ள அத்தாரிட்டிகளாகவும் இருக்கலாம்:

உங்களுக்கு குறித்த சேவைகளை செய்யவே நாங்கள் தகவல்களை வாங்கிக் கொள்கிறோம் மேலும் நீங்கள் விசாரிக்கையில் உங்கள் மூலமாக அல்லது விசாரணைகளுக்கு பதிலளிக்கையில் நாங்களாக இதைப் பெற்றுக் கொள்கிறோம். நீங்கள் பகிர்ந்த தகவல்கள் மிகவும் சரியானது, முழுமையானது மற்றும் சமீபத்தியது என்பதற்கு நீங்கள் தான் பொறுப்பாளர்.

உங்களுடைய பர்சனல் தகவல்களை எப்பொழுது பகிர்ந்து கொள்கிறோம்

டிஎம் எல் பர்சனல் தகவல்களை பகிர்வது அல்லது பத்திரப்படுத்துவது என்பது மிக அவசியமான சேவைகளை வழங்குகையில் அல்லது எங்களுடைய பிசினஸ் நடவடிக்கைகளை மேற்கொள்கையில் மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறது. ஒருவேளை டிஎம் எல் உங்களுடைய பர்சனல் தகவல்களை வெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பினால், டிஎம் எல் கண்டிப்பாக உங்களிடம் பிரைவஸி உரிமைகள் குறித்த அனுமதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் மேலும் தகவல்களை பாதுகாப்பாக வைப்பது மற்றும் பகிர்ந்தவருக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்குமான உறுதியை வழங்க வேண்டும். உங்களைப் பற்றிய பர்சனல் தகவல் சேகரிப்பின் போது சிறப்பான பிரிவுகளில் நாங்கள் தகவல்களை கேட்டுக் பெற்றுக் கொள்வதில்லை ( இதில் உங்கள் சாதி அல்லது இனம், மத அல்லது தத்துவார்த்தக் கொள்கைகள் நம்பிக்கைகள், பாலியல் வாழ்க்கை, பாலியல் விருப்பங்கள், அரசியல் கருத்துகள், வர்த்தக யூனியர் உறுப்பினர், உங்களுடைய உடல்நலம் மற்றும் ஜெனட்டிக் மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் ஆகியன). மேலும் நாங்கள் உங்களைப் பற்றிய சட்டரீதியான புகார்கள் மற்றும் பதிவான குற்றங்கள் குறித்தும் கேட்டுக் கொள்வதில்லை.

டிஎம் எல் ஒருவேளை, உங்களுடைய அனுமதியுடன், உங்கள் தகவல்களை தர்டு பார்ட்டிக்கு வாடிக்கையாளர் சேவைகளுக்காக டிஎம் எல் விதிகளுக்கு உட்பட்டு வாய்ப்புக்ள் மற்றும் பல விரங்களை விளம்பரப்படுத்தும்படி கேட்டுக் கொள்ள பயன்படுத்துகிறது, அல்லது எங்களுடைய இணையத்தளத்தில் அல்லது நிறுவனத்தின் வாய்ப்புகளுக்கா உங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டியும் அறிவிக்க வேண்டியும் தகவல்களைப் பயன்படுத்துகிறது. உதாரணத்திற்கு:

டிஎம் எல்க்கு உள்ளாக: உலகம் முழுவதுக்கும் எங்களுடைய டிஎம் எல் டீம்கள் பிசினஸ்க்கு மற்றும் செயல்பாடுகளுக்கு உதவி செய்கின்றன, பர்சனல் தகவல்கள் அவசியப்பட்டால் பகிர்ந்து கொள்ளவும் படுகின்றன ஆல்லது சேவைகள், கணக்கு நிர்வாகம், விற்பனை மற்றும் மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் அல்லது தொழில்நுட்ப ஆதரவு மற்றும் பிசினஸ் மற்றும் புராடக்ட் மேம்பாடு என்று பலப்பல நிலைகளில் பர்சனல் தகவல் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய சாத்தியப்பாடுகளில் அனுமதியின் பேரில் பயன்படுத்துகிறது. எங்களுடைய அனைத்து ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் இந்த தகவல்கள் பாதுகாப்பை மிகவும் சிரத்தையுடன் கடை பிடிக்க வேண்டும் மற்றும் பர்சனல் தகவல்களை பயன்படுத்துகையில் செக்யூரிட்டி பாலிஸிகளையும் பின்பற்ற வேண்டும்.

பிசினஸ் பார்ட்னர்கள்: நாங்கள் அவ்வப்போது மற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம் இதனால் கோ-பிராண்ட் சேவைகள், கண்டெண்ட் வழங்குதல், அல்லது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், மாநாடுகள், மற்றும் செமினார்கள் என ஏற்பாடுச் செய்கிறோம். இப்படியான ஏற்பாடுகளின் போது, நீங்கள் டிஎம் எல்க்கு மற்றும் எங்களுடைய பார்ட்னர்களுக்கு வாடிக்கையாளராக இருக்கிறீர்க்ள் மேலும் நாங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்க மற்றும் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறோம். டிஎம் எல் பர்சல் தகவல்களை பிரைவஸி பாலிஸியின் விதிகளுக்கு உட்பட்டு பயன்படுத்தவும் பாதுகாக்கவும் செய்கிறது.

எங்களுடைய தர்டு-பார்ட்டி சேவை வழங்கிகள்: நாங்கள் சேவைகள் வழங்கக் கூடிய தர்டு-பார்ட்டி மையங்களுடன் தொடர்பில் இருக்கிறோம் மற்றும் உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள இவர்களின் உதவியை நாடுகிறோம். இவர்கள் நாங்கள் எதிர்பார்க்கும் சேவைகளை எங்களுக்கு வழங்குவார்கள் என்பதன் அடிப்படையில் நாங்கள் பர்சனல் தகவல்களை இவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். குறிப்பாக சாஃப்ட்வேர், சிஸ்டம் மற்றும் பிளாட்ஃபார்ம் சப்போர்ட்; நேரடி மார்க்கெட்டிங் சேவைகள்; கிளாவுட் ஹாஸ்டிங் சேவைகள்; விளம்பரம்; மற்றும் ஆர்டர் நிவர்த்தி மற்றும் டெலிவரி வழங்குதல் என பலப்பல பணிகளுக்கு பயன்படுகிறது. எங்களுடைய தர்டு-பார்ட்டி சர்வீஸ் புரவைடர்கள் கண்டிப்பாக பர்சனல் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளும் அனுமதியைப் பெற்றிருக்கவில்லை, மேலும் எங்களுக்கு சேவை வழங்குதற்காக மட்டுமே தகவல்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சட்டக் காரணங்களுக்காக தர்டு –பார்ட்டிகள் : நாங்கள் அவசியப்படுகிறது என்றால் மட்டுமே பர்சனல் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம் குறிப்பாக:

 • சட்ட ரீதியான செயல்பாடுகளை நிறைவு செய்யும் போது மற்றும் அரசாங்க முகவாமைகளின் கோரிக்கைகளின் போது, குறிப்பாக சட்டத்தை அமுல்படுத்துகையில் அல்லது பிற பொது அத்தாரிட்டிகளில் செயல்படுத்துகையில், இதில் வெளிநாட்டில் நிறுவியுள்ள இருப்பிடத் தகவல்களும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 • ஒரு அமைப்புடன் மெர்ஜ் ஆகும் நிகழ்வின் போது, விற்பனை, மறுவடிவமைப்பு, நிறுவுதல், இணைந்த நிறுவனம், அஸைன்மெண்ட், டிரான்ஸ்ஃபர்,அல்லது பிற பணிகளின் போது அல்லது நமது பிசினஸின் ஏதேனும், அசெட்கள், அல்லது ஸ்டாக் ( இதில் நிறுவனம் திவாலாகிப் போதல் அல்லது இப்படியான நிகழ்வுகளின் போது ஆகியனவும் அடங்கும்)
 • நம்முடைய உரிமைகள், யூஸர்கள், சிஸ்டம்கள் மற்றும் சேவைகள் ஆகியவைகளைப் பாதுகாக்க.

நாங்கள் எங்கே மற்றும் எப்படி உங்கள் பர்சனல் தகவலை பாதுகாத்து வைக்கிறோம்

டிஎம் எல் குளோபல் அமைப்பு, சேகரிக்கும் தகவல்களை பிரைவஸி பாலிஸி அறிவுப்புக்குத்தக்கபடி பயன்படுத்திக் கொள்கிறது மற்றும் குறிப்பிட்ட சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு தகவல்களை பயன்படுத்திக் கொள்வது பாதுகாப்பது என்ற அனைத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. டிஎம் எல் நிறுவனத்திற்கு நெட்வொர்க்குகள், டேட்டாபேஸ்கள், சர்வர்கள், சிஸ்டம்கள், சப்போர்ட் மற்றும் ஹெல்ப் டெஸ்க் ஆகியன எங்களுடைய அலுவலகம் சார்பாக உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப் படுகிறது. நாங்கள் தர்டு பாட்டிகளுடம் கிளாவுட் ஹாஸ்டிங் சேவைகளுக்காக இணைகிறோம், மற்றும் தொழில்நுட்ப ஆதரவு சேகரிப்பின் மூலமாக எங்களுக்குத் தேவையான பிசினஸ் பணிகளை, வொர்க்ஃபோர்ஸ் மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைத்தையும் பெற்றுக் கொள்கிறோம். மேலும் சேகரிக்கப்பட்ட பர்சனல் தகவல்கள் ஒழுங்கு முறையில் பயன்படுத்தப்படுகிறது, பாதுகாக்கப் படுகிறது மற்றும் பகிர்ந்து கொள்ளப் படுகிறது என்பவைகளுக்கு உத்திரவாதமாக இருக்கிறோம்.

டிஎம் எல் உங்களுடைய பர்சனல் தகவல்களை யாருக்கும் விற்பனை செய்வது அல்லது வாடகைக்கு கொடுப்பது என்று செய்யாது. இன்னும் சில கேஸ்களில், உங்களுக்குத் தேவையான புராடக்ட்களை அல்லது சேவைகளை உங்களுக்கு வழங்க வேண்டி பயன்படுத்திக் கொள்ளும், உங்களுடைய பர்சனல் தகவல்களை டிஎம் எல் நிறுவனத்திற்கு உள்ளாக நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் அல்லது அவசியப்பட்டால் தர்டு பார்ட்டிக்கு கொடுக்கிறேன்.

நாம் பர்சனல் தகவல்களை மற்ற நாடுகளுக்கு டிரான்ஸ்பர் செய்யும் போது இது அதே அளவிலான தகவல் பிரைவஸி பாதுகாப்பை உங்கள் நாட்டில் உத்திரவாதம் அளிப்பதில்லை, மேலும் நாங்கள் தகவல் பிரைவஸி பாதுகாப்புக்கான பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. உதாரணமாக, நாங்கள் அங்கிகாரம் அளிக்கப்பட்ட காண்டிராக்சுவல் கிளாவ்ஸ்களை, மல்டிபார்ட்டி தகவல் டிரான்ஸ்பர் ஒப்பந்தங்கள், இண்ட்ராகுருப் ஒப்பந்தங்கள், மற்றும் பலப்பல வழிகளால் உங்கள் பர்சனல் தகவல்கள் பகிரப்பட்டாலும் பாதுகாக்கவும் பட்டு வருகின்றது.

பர்சனல் தகவல்களை எப்படி பாதுகாக்கிறோம்

டிஎம் எல் பயன்படுத்துகிறது மிக சவுகரியமான தொழில்நுட்பங்கள் மற்றும் புரோஸிஜர்கள் இதன் மூலமாக பர்சனல் தகவல்கள் பாதுகாக்கப் படுகின்றன. தகவல்கள் மற்றும் பாதுகாப்பு பாலிஸிகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்து சர்வதேசிய ஸ்டாண்டர்டுகளின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது மற்றும் ரெகுலராக விமர்சிக்கவும் படுகிறது மேலும் தங்களுடைய பிசினஸ் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும்படியாக அவசியமான மாற்றங்களை தொழில்நுட்பம் வழியாக மற்றும் ரெகுலேட்டரி தேவைகள் வழியாக செய்து கொள்ளப் படுகிறது, உதாரணமாக:

 • பாலிஸிகள் மற்றும் செயல்பாடுகள்: டிஎம் எல் ஊழியர்கள் எளிமையான தொழில்நுட்பங்கள், பிசிக்கல் மற்றும் ஆபரேஷனல் செக்யூரிட்டி செயல்பாடுகள் மூலமாக பர்சனல் தகவல்கள் திருடு போகாமல் இருக்கும் படி, தவறாக பயன்படுத்திவிடாதபடி, மாற்றி விடாதபடி அல்லது எவ்வித நோக்கமும் இல்லாமல் அழித்து விடுகின்றபடி வைத்துக் கொள்வது இல்லை. எங்களுடைய பாதுகாப்பு பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட இடைவெளியில் சோதனை செய்து கொள்ளவும் அப்டேட் செய்யவும் படுகின்றன, இதனால் குறிப்பிட்ட பாதுகாப்பு சேகரிக்கப்பட்ட செக்யூரிட்டிகளுக்கு வழங்கப் படுகிறது.
 • உங்களுடைய பர்சனல் தகவல்களைப் பார்க்க மற்றும் பகிர்ந்து கொள்ள நாங்கள் கடுமையான தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
 • நாங்கள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளச் செய்கிறோம், இத்துடன் மானிடரிங் மற்றும் ஃபிசிக்கல் செயல்பாடுகள் என பல நடவடிக்கை மூலமாக தகவல்கள் பாதுகாக்க மற்றும் பாதுகாப்பான முறையில் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது.
 • நமக்கு பிரைவஸி, பாதுகாப்பு விபரங்கள், மற்றும் பல அவசியமான பயிற்சிகள் மூலமாக ஒரு சீரான செயல்பாட்டின் படி நம்முடைய ஊழியர்களுக்கு மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கு ஒருவரின் பர்சனல் தகவலை பார்க்கவும் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.
 • நம்முடைய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் நம்முடைய தகவல்கள் மற்றும் பாதுகாப்பு பாலிஸிகள் மற்றும் செயல்பாடுகள் மற்றும் அவசியமான காண்ட்ராசுவல் நிலைகள் என்று எல்லா நடவடிக்கைகளிலும் மிகச் சிறப்பான ஒத்துழைப்பைக் கொடிக்கிறார்கள்.
 • நமக்கு ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு விமர்சனங்கள், நம்முடைய தர்டு-பார்ட்டி வெண்டர்கள் மற்றும் சர்வீஸ் புரவைடர்கள் ஆகிய அனைவரும் நமது பர்சனல் தகவல்களை அவசியமான பணிகளுக்காக மிகவும் பாதுகாப்பான முறையில் நம்முடைய பாதுகாப்பு பாலிஸிகள் மற்றும் செயல்பாடுகளுக்கு உட்பட்டு பயன்படுத்தி வருகின்றனர்.

குக்கீகள்

அந்தந்தந்த காலகட்டங்களில், நாம் ஸ்டாண்டர்டான தொழில்நுட்பமான “குக்கீ”யை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். குக்கி என்பது ஒரு சிறிய டெக்ஸ்ட் ஃபைல் ஆகும், இது கம்யூட்டரில் வைக்கப் படுகிறது அல்லது மற்ற டிவைஸ்களில் வைக்கப்படுகிறது மற்றும் இதன் மூலமாக யூஸர்களைக் கண்டு பிடித்தல் அல்லது அவர்களின் டிவைஸ்களைக் கண்டுபிடித்து அவர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. குக்கீஸ்கள் வழக்கமாகவே நான்கு வகையான பிரிவுகளைக் கொண்டது, அவைகளின் செயல்பாடுகளுக்குத் தக்கபடி மற்றும் பணிக்கப்பட்ட வேலைகளுக்குத் தக்கபடி செயல்படுகிறது: அவசியமான குக்கீஸ், செயல்பாட்டு குக்கீஸ், ஃபங்க்‌ஷனல் குக்கீஸ், மற்றும் மார்க்கெட்டிங் செயல்பாடுகளுக்கான குக்கீஸ். ஒரு குக்கி பணிக்கப்பட்ட வேலையை விட வேறு தகவல்களை ஹார்டு டிரைவிலிருந்து எடுத்துக் கொள்ள முடியாது, மேலும் வைரஸ்களை கணிணிக்குள் பரப்பி விட முடியாது, அல்லது உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் பிரதி எடுத்துக் கொள்ள முடியாது. தற்போது, இணையத்தளங்கள் குக்கிகளைப் பயன்படுத்தி யூஸர்களின் வருகையை மேம்படுத்துகின்றன; பொதுவாகவே குக்கிஸ் பாதுகாப்பாக யூஸர்களின் யூஸர் ஐடி மற்றும் பாஸ்வொர்டு போன்றவற்றைப் பாதுகாக்கிறது, முகப்பு பக்கத்தை பர்ஸனலைஸ் பக்கமாக்குகிறது, மற்றும் ஒரு இணையத்தளத்தின் எந்த பகுதியை நீங்கள் பார்வையிட்டீர்கள் என்று பதிவு செய்கிறது. உங்கள் குக்கி எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று உங்கள் புராஸரில் செட் செய்து வைத்துக் கொள்ள முடியும். இப்படியான நீங்கள் குக்கீஸை அனுமதிப்பதா இல்லை வேண்டாமா என்று தீர்மானித்துக் கொள்ளலாம். மேலும் உங்கள் பார்வையாளர்கள் எப்பொழுது மற்றும் எப்படி இந்த தளத்திற்கு வருகை தந்தார்கள் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம், இந்த தகவல்கள் மூலமாக தளத்தை தொடர்ந்து எப்படியெல்லாம் மேம்படுத்த வேண்டுமென்று திட்டமிட முடிகிறது.

13க்கும் குறைந்த வயதுடைய சிறார்கள்

நாங்கள் சிறார்களுக்கு நேரடியாக எந்த சேவையையும் வழங்குவதில்லை அல்லது அவர்களின் தகவல்களை சேகரிப்பதும் இல்லை. பெற்றோர்கள் அல்லது அவர்களின் பாதுகாவலர்கள் 13 வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள் அவர்கள் டிஎம் ல் தளத்தில் அவர்களின் பொறுப்பில் தகவல்களைப் பரிமாறலாம் மற்றும் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் லீகல் லயபிலிட்டிகள் அவர்களின் பொறுப்பே பிள்ளைகள் குறித்த அனைத்தும் குறிப்பாக லிமிடேஷன்கள், மானிடரிங் மற்றும் பிள்ளைகளின் அனுமதி மற்றும் டிஎம் எல் தளத்தை பார்வையிடுதல் என எல்லாமும் பெற்றோர்களின் முன்னிலையில் செய்து கொள்ளப் படுகிறது.

ஒருவேளை டிஎம் எல் க்கு 13 வயதுக்கும் குறைவான வயதுடைய நபரின் பர்சனல் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவந்தால், அதுவும் பெற்றோர்களின் கவனத்திற்குட்படாமல் செய்திருந்தால், டிஎம் எல் சரியான நடவடிக்கை எடுத்து இப்படியான தகவல்களை நீக்கி விடும். மேலும், உங்கள் பிள்ளைதான் அவனுடைய/அவளுடைய தகவலை டிஎம் எல் நிறுவனத்தில் கொடுத்தது என்று தெரிய வந்தால், நீங்கள் அப்படியான தகவலை டேட்டபேஸிலிருந்து நீக்கிவிடும்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பி வேண்டுகோளாக கேட்டுக் கொள்ளலாம். இப்படியான வேண்டுகோலை பெற்ற பின்னர், டிஎம் எல் தங்களுடைய டேட்டாபேஸிலிருந்து குறிப்பிட்ட தகவலை நீக்கி விடும்.

உங்களுடைய உரிமைகள் மற்றும் உங்கள் பர்சனல் தகவல்கள்

உங்களுடைய தகவல்களைப் பார்க்க மற்றும் அதை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் உங்கள் முழு உரிமையையும் நாங்கள் மதிக்கிறோம், மற்றும் உங்களுடைய தகவல்கள் குறித்த உங்கள் கோரிக்கையையும், எங்கெல்லாம் அவசியப்படுகிறதோ அங்கு, ஒழுங்கு படுத்துவது, அமல்படுத்துவது, அல்லது நீக்குவது என எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம். இப்படியான சந்தர்ப்பங்களில், நீங்கள் உங்களுடைய அடையாளத்திற்கான சான்றை கண்டிப்பாக காட்ட வேண்டும், அதன் பின்னரே உங்கள் உரிமைகளின் படி செயல்பாடுகள் நடத்தப்படும்.

 • தகவல்களை பார்க்கும் உரிமை: எந்தவொரு நிலையிலும் நீங்கள் உங்களுடைய வேண்டுகோளைச் சொல்ல எங்களைத் தொடர்பு கொள்ளலாம், மேலும் தகவல்கள் சார்ந்த விரங்கள் மற்றும் நாங்கள் அந்த தகவல்களை ஏன் வைத்திருக்கிறோம் என்பது பற்றியும் கேட்டுக் கொள்ளலாம். நாங்கள் தகவல்களை பார்க்கலாம், மேலும் நாங்கள் பெற்ற தகவல்களை மாற்றவும் முடியும். உங்களுடைய கோரிக்கையை நாங்கள் பெற்ற உடன் ஒரு மாத காலத்திற்குள் நிவர்த்தி செய்கிறோம். முதல் முறை வேண்டுகோள் விடுக்கையில் எந்தவிதமான கட்டணங்கள் மற்றும் சார்ஜ்கள் இல்லை ஆனால் கூடுதலாக ஒரே தகவல் குறித்த மாற்றங்களுக்கான கோரிக்கை கொடுத்து வந்தால், நிர்வாகக் கட்டணமாக சிறுதொகை வசூலிக்கப் படும்.
 • தகவல்களை சரி செய்ய மற்றும் அப்டேட் செய்யும் உரிமை: உங்களைப் பற்றிய தகவல்கள் காலாவதியாகி விட்டால் அல்லது முழுமையாகாமல் இருந்தால் அல்லது தவறாக இருந்தால், நீங்கள் எங்களிடம் தெரிவிக்கலாம் நாங்கள் அதை அப்டேட் அல்லது சரி செய்கிறோம்.
 • உங்களுடைய தகவல்கள் நீக்கப் படுவதற்கான உரிமை: உங்களுடைய பர்சனல் தகவலை நாங்கள் இனிமேல் பயன்படுத்தக் கூடாது என்று நீங்கள் நினைத்தால் அல்லது நாங்கள் அந்த தகவலை சட்ட விரோதமான முறையில் பயன்படுத்துகிறோம் என்றால், நீங்கள் கண்டிப்பாக எங்களிடமிருக்கும் தகவலை நீக்கும்படி கேட்டுக் கொள்ளலாம். உங்களுடைய வேண்டுகோள் எங்களுக்கு கிடைத்தவுடன் தகவல்கள் நீக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பது குறித்து நாங்கள் சோதனையிடுகிறோம் அல்லது அது ஏன் நீக்கப்படவில்லை என்று விசாரிக்கிறோம் (உதாரணமாக எங்களுக்கு இந்த தகவல் சில காரணங்களுக்காக அவசியப்படுகிறது அல்லது சில ரெகுலேட்டரி செயல்பாடு(களுக்காக) அது தேவையாக இருக்கிறது)
 • பயன்படுத்துவதைத் தடுக்கும் உரிமை: தகவலை பயன்படுத்தும் செயல்பாட்டை தடுக்கும்படியாக கேட்டுக் கொள்ள உங்களுக்கு உரிமை இருக்கிறது. உங்களுடைய கோரிக்கையை பெற்றுக் கொண்ட பின்னர், நாங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம் மற்றும் நீங்கள் சொன்ன விஷயத்தை நாங்கள் செயல்படுத்த தயாராக உள்ளோம் அல்லது அது எங்களுக்கு சில முக்கியக் காரணங்களுக்கு பயன்படும் என்ற போது அதுபற்றி உங்களிடம் பேசுகிறோம். நீங்கள் மறுப்பு தெரிவித்திருந்த போதிலும், உங்களுடைய தகவலை நாங்கள் வைத்துக் கொள்வதை தொடர்கிறோம் இதனை உங்கள் மற்ற உரிமைகள் அல்லது கொண்டு வருதல் அல்லது சட்டரீதியான கிளைம்களை பாதுகாத்தல் என செய்து கொள்ளப் படுகிறது.
 • தகவல்களை போர்டபிலிட்டி செய்யும் உரிமை: உங்களுடைய தகவலை நீங்கள் வேறு கண்ட்ரோலருடன் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் விடுத்த கோரிக்கையை நாங்கள் உடனடியாக அதை அமல் படுத்துகிறோம், மேலும் இந்த கோரிக்கையை நீங்கள் கேட்டுக் கொண்ட பின்னர் ஒரு மாத காலத்திற்குள் அதை செயல்படுத்தி விடுகிறோம்.
 • உங்களுடைய விருப்பத்தை நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் மேலும் இதனை எந்த நேரத்திலும் செயல்படுத்தலாம் மற்றும் எந்தவொரு தகவலை பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டாலும் அதை நாங்கள் செயல்படுத்துகிறோம். உங்களுடைய கோரிக்கையை நீங்கள் தொலைப்பேசி, மின்னஞ்சல், அல்லது தபால் மூலமாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் ( வித்டிராவல் படிவத்தின் மூலமாக நீங்கள் திரும்பப் பெறலாம்).
 • எங்கெல்லாம் அவசியப்படுகிறதோ அங்கெல்லாம் பர்சனல் தகவலை பயன்படுத்துவதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்கும் உரிமையைப் பெற்றுள்ளீர்கள்.
 • பர்சனல் தகவல் பாதுகாப்பு பிரதிநிதியிடம் நீங்கள் புகாரை பதிவு செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது.

உங்களுடைய பர்சனல் தகவல்களை நாங்கள் எவ்வளவு காலம் பாதுகாத்து வைக்கிறோம்?

நாங்கள் பர்சனல் தகவல்களை சில சட்டரீதியான மற்றும் பிசினஸ் பணிகளுக்காக எவ்வளவு காலம் வைத்திருக்க முடியுமோ அவ்வளவு காலகட்டத்திற்கு பாதுகாத்து வைக்கிறோம். தகவலை தக்க வைத்துக் கொள்ளும் கால அளவை நிர்ணயித்தல், டிஎம் எல் குறிப்பிட்ட லோகல் சட்டங்கள், காண்ட்ராக்சுவல் ஆப்ளிகேஷன்கள், மற்றும் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் என நம்முடைய வாடிக்கையாளர்களின் விருப்பப் படி செய்து கொள்ளலாம். மேலும் எங்களுக்கு பர்சனல் தகவல்கள் தேவையில்லை என்று வரும் நிலையில், நாங்கள் பாதுகாப்பாக அதை அழிக்கிறோம் அல்லது முற்றிலும் நீக்கி விடுகிறோம்.

எங்களுடைய பிரைவஸி அறிக்கையில் உள்ள மாற்றங்கள்

டிஎம் எல் பிரைவஸி அறிக்கையை குறிப்பிட்ட காலகட்டத்தில் அப்டேட் செய்து கொள்ளக் கூடும். எங்களுடைய இணையத்தளத்தை அடிக்கடிப் பாருங்கள் மேலும் தற்போதைய பிரைவஸி அறிக்கை குறித்து தெரிந்து கொண்டு டிஎம் எல் உங்களைப் பற்றிய தகவல்களை எப்படி பாதுகாக்கிறது அல்லது பயன்படுத்துகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த மாற்றத்திற்கான அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது, நாங்கள் ஒரு முக்கியமான அறிவிப்பை இந்த இணையத்தளத்தில் வழங்குகிறோம் மற்றும் தற்போதைய தேதி வரைக்கும் தகவல்களை அப்டேட் செய்து கொள்கிறோம்.

கேள்விகள்/தொடர்பு தகவல்கள்

பிரைவஸி அறிக்கை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது இதுபற்றி கருத்துகள் இருந்தால், தயவு செய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும் அல்லது எழுதவும்:

மின்னஞ்சல்: dpr@tatamotors.com

அமலுக்கு வந்த நாள்: 28.09.18