லோடிங்...

டாடா யோதா பிக்அப் பற்றி

  • டாடா யோதா என்பது வெறும் ஓர் சிறந்த பொறியியல் படைப்பு என்பதை விடச் சிறப்பானது. இது வெற்றிக்கான பாதையில் யாராலும் தடுத்து நிறுத்த முடியாத எங்கள் வாடிக்கையாளர்களிடமுள்ள போராட்டக் குணத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும், அவர்களது தைரியமான லட்சியங்களைப் பின்தொடர்வதில் நாங்கள் அவர்களுக்குத் துணையாக நிற்கிறோம்.
  • அதனால் தான், புதிய டாடா யோதா BS6 வரிசை பிக்அப்கள் குறைந்த செலவு, அதிக வருவாய் என்ற வாக்குறுதியின் பேரில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் எரிபொருள் திறன் நிறைந்த எஞ்சினால் ஆற்றலூட்டப்படும், மற்றும் மிகப்பெரிய சரக்கு ஏற்றும் பகுதியைக் கொண்டுள்ள டாடா யோதா, இந்தியச் சாலைகளில் உறுதியான மற்றும் மிகவும் ஸ்டைலான பிக்அப் வரிசையில் ஒன்றாகும்.
  • 4x2 மற்றும் 4x4 டிரைவ் ஆப்ஷன்கள், மற்றும் 1200 kg, 1500 kg மற்றும் 1700 kg என்ற பல்வேறு பேலோட் ஆப்ஷன்களுடன், ஒற்றைக் கேப் மற்றும் க்ரூ கேபின் ஆகிய இரண்டு மாற்றுருக்களிலும் கிடைக்கும் யோதா பிக்அப் வரிசையானது, பல பயன்பாடுகளில் தடையின்றிப் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் கேபின் சேஸ் மாற்றுருவானது தனிப்பயனாக்கப்பட்ட பாடி ஆப்ஷன்களின் நெகிழ்வை வழங்குகிறது.
  • குறைந்த TCO (உரிமையாக்கு மொத்தச் செலவு) மற்றும் அதிகபட்ச இலாபங்கள் என்ற வாக்குறுதியுடன் உங்கள் தொழிலை இயக்கும் முன்னேற்றத்தில், டாடா யோதா பிக்அப் BS6 வரிசையானது, உங்கள் அறுதி கூட்டாளி ஆகும்.
டாடா யோதா BS6 6 ka டிரம் உடன்.
டாடா யோதா பிக்அப் மாடல்கள் ஆறு மதிப்புக்கூட்டு பில்லர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது அவை இதைப் போட்டியாளர்களை விட மேலே நிறுத்துகிறது.
டாடா யோதா பிக்அப் ஒரு கண்ணோட்டம்
டைனமிக் பவர்
73.6 kW (100 HP) என்ஜின் பவர் மற்றும் 250 Nm டார்க் நிமிடத்திற்கு 1000 முதல் 2500 சுற்றுகள்
நம்பத்தகுந்த செயல்திறன்
210 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் மற்றும் 40% தரவகைப்படுத்தல் திறன்
அதிகபட்ச இலாபங்கள்
உட்புற சரக்கு லோட் செய்யும் பகுதி 47.9 சதுர அடி, 1700 கிலோ கிராம் வரை பேலோட்
விரிவான பாதுகாப்பு
கிரும்பல் ஜோன் உடன் முன்பக்க பானட், அகண்ட அக்ஸில்கள் மற்றும் சரக்கு மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த மடக்கக்கூடிய ஸ்டீரிங் வீல்
அதிகபட்ச சேமிப்புகள்
நீண்ட சர்விஸ் இடைவெளிகள் மற்றும் எஃகோ ஃபூயல் சேமிப்பு வழிமுறை
மிகச் சிறந்த வசதி
ஹெட்ரெஸ்ட் உடன் பிளாட்டான சீட், அதிகப் பயன்பாடு டாஸ்போர்டு மற்றும் காபின் உட்புற தோற்றம்
பயன்பாடுகள்

டாடா யோதா வரிசை பிக்அப்களானது, சரக்குகள் மற்றும் குழு போக்குவரத்தின் பல்வேறு வணிக நோக்கங்களுக்கான ஓர் சிறந்த தீர்வாகும்:

  • பால், வேளாண் விளைபொருள் (உணவுத் தானியங்கள்), பழங்கள் மற்றும் காய்கறிகள், கோழிகள், மீன்கள், பார்சல் / கூரியர், கொள்கலங்கள், கேட்டரிங், FMCG, வன்பொருள், சிமெண்ட், LPG சிலிண்டர்கள், பணம் ஏற்றிச் செல்லும் வேன், கட்டுமானம் / தள உதவி, மற்றும் பல..

சிற்றேட்டைப் பதிவிறக்கவும்