லோடிங்...

யோதா BS6 பிக்அப்பின் அம்சங்கள்

யோதா BS6 பிக்அப்பின் அம்சங்கள்
  • ஆற்றல் மற்றும்
    எரிபொருள் திறன்
  • செயல்திறன் மற்றும் கடினத்தன்மை
  • அதிக வருவாய்
  • உயர் பாதுகாப்பு
  • அதிகச் சேமிப்பு
  • அதிகச் சௌகரியம் மற்றும் வசதி
ஆற்றல் மற்றும் எரிபொருள் திறன்

டாடா யோதா வரிசை பிக்அப்களானது, சிறந்த ஆற்றல் மற்றும் எரிபொருள் திறனை வழங்கும், எப்போதும் நம்பகமான டாடா மோட்டார்ஸ் 2.2 L DI எஞ்சினால் ஆற்றலூட்டப்படுகிறது. இந்தக் கனரக எஞ்சினானது, 1000 - 2500 r/min - இல் இருந்து தட்டை வளைவு பரந்த பட்டையில் 73.6 kW (100 HP) ஆற்றல் மற்றும் 250 Nm உயர் முறுக்கு திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமை ஏற்றப்பட்ட நிலைகளில், இது குறைவான கியர் மாற்றங்களையும், சிறந்த பிக்அப்பையும் வழங்குகிறது. கூடுதலாக, ஓர் குறைந்த NVH (சத்தம் - அதிர்வு - கடுமையான தன்மை) மென்மையான மற்றும் சௌகரியமான வாகனம் ஓட்டும் அனுபவத்தை உறுதிப்படுத்துகிறது.

செயல்திறன் மற்றும் கடினத்தன்மை

வலுவான டாடா யோதா பிக்அப்புடன் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், இது வலுவான, நம்பகமான டிரைவ்லைன் கூட்டுத்தொகுதியுடன் வருகிறது: வலுவான சஸ்பென்ஷன், அகலமான பின்பக்க அச்சு (ஆக்ஸில்), முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 4 mm தடிமனான-உருட்டப்பட்ட சேஸ் சட்டம், குழப்பமான நிலப்பரப்புகளில் அனைத்துச் சுமைகளையும் தாங்கும் அளவுக்கு உறுதியானது.

பெரிய 16-அங்குல டயர்கள் மற்றும் PTO வழிவகையுடனான நம்பகமான கியர் பாக்ஸ்களுடன், இது 40% வரையிலான தரத்தன்மையை வழங்குகிறது. ஓர் 260 mm கிளட்ச் விட்டமானது, மென்மையான கியர் மாற்றத்தையும், ஓர் மேம்படுத்தப்பட்ட கிளட்ச் ஆயுளையும் இயலச் செய்கிறது. அதனுடன், அதன் உகந்ததாக்கப்பட்ட கியர் விகிதம் மற்றும் பின்பக்க வேறுபாட்டு அச்சு கியர் விகிதமானது, ஓர் உயர் இழு-சக்தி மற்றும் மைலேஜை உறுதி செய்கிறது. கூடுதலாக, 210 mm கிரவுண்ட் கிளியரன்ஸானது, கடினமான சாலை நிலைகளில் எந்தவொரு சுமையையும் எடுத்துச் செல்ல உங்களை அனுமதிக்கிறது.

அதிக வருவாய்

டாடா யோதா பிக்அப்புடன் உங்கள் இலாபங்களை அதிகரித்திடுங்கள், இது 1200 kg, 1500 kg மற்றும் 1700 kg என்ற பேலோட் ஆப்ஷன்களுடன், 47.9 சதுர அடியில் மிகப்பெரிய சரக்கு தள உட்புறச் சுமையேற்றப் பகுதியுடன் வருகிறது. அதன் CED-பெயிண்ட் செய்யப்பட்ட உயர் வலிமையுடைய உடலானது, அதிகபட்ச ஆயுளை வழங்குகிறது. கூடுதலாக, அதன் மிகப்பெரிய 16 அங்குல டயர்களுடன், இது எந்தவொரு நிலப்பரப்பிலும் அனைத்துச் சுமைகளையும் சிரமமின்றி எடுத்துச்செல்கிறது. டாடா யோதா, அனைத்துத் தரங்கள், சுமைகள் மற்றும் சாலை நிலைகளிலும் செயல்படுவதற்காக வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது, இதனால் உங்கள் வருவாய் அதிகரிக்கும்.

உயர் பாதுகாப்பு

டாடா யோதா பிக்அப் வரிசையானது, அதைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் அது சுமந்து செல்லும் சரக்குகளுக்குச் சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது நொறுங்கல் பகுதியுடனான பெரிய போனட்டுடனும், மடங்கக்கூடிய ஸ்டீயரிங் வீலுடனும் வருகிறது, இது முன்புற மோதல்களின் போது அதிகபட்சப் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ள ஆண்டி-ரோல் பார்கள் மற்றும் ஒரு அகலமான ரியர் ஆக்ஸில் டிராக்கானது, சாலை மற்றும் சாலை இல்லா நிலைகளிலும் நிலைத்தன்மையைச் சேர்க்கிறது. மேலும், முன்பக்கம் உள்ள ட்வின்-பாட் டிஸ்க் பிரேக்குகள், எந்தவொரு சாலை நிலையிலும், எந்தவொரு சுமையுடனும் சிறந்த பிரேக்கிங்கை உறுதிசெய்கிறது.

அதிகச் சேமிப்பு

டாடா யோதா பிக்அப் வரிசையானது, இந்த வகையில் குறைவான பராமரிப்பு செலவைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சப் பராமரிப்பு தேவைப்படும் டிரைவ்லைனுடன், இது அதிகபட்சச் சேமிப்பு மற்றும் அதிகச் செயல்பாட்டு நேரத்தை வழங்குகிறது.

20,000 kms எஞ்சின் ஆயில் மாற்ற இடைவெளி, 80,000 kms கியர் பாக்ஸ் மற்றும் ரியர் டிஃப்ஃபெரென்ஷியல் ஆயில் இடைவெளியுடன், ஒரு LFL (வாழ்நாள் முழுவதிற்கும் உய்வூட்டப்பட்ட) புரொப்பல்லர் ஷாஃப்ட், மற்றும் ஹப் மற்றும் சஸ்பென்ஷனுக்குக் கிரீஸ் தேவைப்படாத அம்சம் என்பதன் பொருள், பராமரிப்பு தேவையில்லை மற்றும் உங்களுக்கு மிகப்பெரிய சேமிப்பு என்பதாகும். கூடுதலாக, ஒரு பிரத்தியேகமான டாடா யோதா முன்னுரிமை சேவை ஹெல்ப்லைன் எண் 1800 209 7979 உடனான, எங்கள் 90-நிமிட/120- நிமிட எக்ஸ்பிரஸ் சர்வீஸ் வாக்குறுதியானது, விரைவில் சாலைக்குத் திரும்ப உங்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் மிகவும் எரிபொருள் திறன் மிகுந்த எஞ்சின்களில் ஒன்றாக, இந்த வரிசையானது காலியான பயணங்களின் போது எரிபொருளைச் சேமிப்பதற்காக உதவும் ஸ்மார்ட் எக்கோ-மோட் ஸ்விட்ச் மற்றும் ஓட்டுநரை எச்சரிக்கும் கியர்-ஷிஃப்ட் அட்வைசருடன் வருகிறது, மேலும் அதிகபட்ச மைலேஜை உறுதி செய்கிறது. இவை அனைத்தும் மற்றும் பலவற்றின் மூலம், நீங்கள் ஒவ்வொரு பயணத்திலும் அதிகம் சேமிக்கிறீர்கள்.

அதிகச் சௌகரியம் மற்றும் வசதி

டாடா யோதா பிக்அப் வரிசையானது, உங்கள் தேவைகளை மனதில் கொண்டு உள்ளுணர்வுடன் வடிவமைக்கப்பட்டதாகும். அதன் ஏரோடைனமிக் வடிவமைப்பு மற்றும் SUV-வகை உயரத்திலிருந்து, பெரிய கேபின் வடிவமைப்பு மற்றும் பக்கக் கதவுகளில் டிரெண்டான டீக்கல்கள் வரை, இது சாலையில் அதன் மனதில் பதியும் இருப்பை உணரச் செய்கிறது.

அதனுடன் சேர்த்து, சாய்க்கக்கூடிய மற்றும் மடக்கக்கூடிய பவர் ஸ்டீயரிங், ஹெட்ரெஸ்ட்களுடன் கூடிய சௌகரியமான பக்கெட் இருக்கைகள், கேபினில்காற்றோட்டத்தை உறுதி செய்வதற்காகப் பின்புறம் ஸ்லைட் செய்யக்கூடிய ஜன்னல்கள், பயன்பாட்டு இடங்களுடன் கூடிய ஸ்டைலான டாஷ்போர்டு, உள்ளமைக்கப்பட்ட ஃபாஸ்ட் மொபைல் சார்ஜர், பாட்டில் ஹோல்டர், செய்தித்தாள் பாக்கெட், பூட்டக்கூடிய கையுறை பெட்டி, மேம்பட்ட புலப்படும் தன்மைக்காக அகலமான ORVM, மற்றும் பின்னோக்கி செல்லும் போது வாடிக்கையாளருக்கு உதவுவதற்காக ரிவர்ஸ் பார்க்கிங் உதவி அமைப்பு (RSPS) போன்ற ஈர்க்கக்கூடிய அம்சங்களின் தொகுப்பு, டாடா யோதா வரிசை பிக்அப்கள் அதிகபட்சச் சௌகரியம் மற்றும் வசதியை வழங்கும் அம்சங்களுடன் வருகிறது.

உங்கள் இரசனை மற்றும் தேவைகளின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட கூடிய பயன்பாடுகளை உருவாக்குவதற்காக டாடா யோதா பிக்அப் வரிசையானது கேபின் சேஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

யோதா பிக்அப் வரிசையானது,
முழு டிரைவ்லைன் மீதும் 3 வருடங்கள் அல்லது 3,00,000 kms -இன் (எது முன்னர் நிகழ்கிறதோ) உறுதியான உத்திரவாதத்துடன் வருகிறது, இதுவே இந்தப் பிரிவில் சிறந்ததாகும்.